states

img

வாக்குத் திருட்டை தேர்தல் ஆணையம் நியாயப்படுத்துகிறது : சிவசேனா (உத்தவ்) கட்சியின் “சாம்னா” நாளேடு சாடல்

வாக்குத் திருட்டை தேர்தல் ஆணையம் நியாயப்படுத்துகிறது : சிவசேனா (உத்தவ்) கட்சியின் “சாம்னா” நாளேடு சாடல்

மும்பை “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா (உத்தவ்) கட்சி யின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னா தனது தலையங்கத்தில் பாஜகவின் வாக்கு  திருட்டை தேர்தல் ஆணையம் நியாயப்படுத்து கிறது என குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக தலையங்கத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,“தேர்தல் மோசடி மற்றும் வாக்காளர்களை ஏமாற்றியதன் மூலமாகத் தான்,பாஜக மத்தியில் மற்றும் மகாராஷ்டிரா வில் ஆட்சிக்கு வந்துள்ளது. இதெல்லாம் பீகாரில் தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மூலமாகவே அம்பல மாகியுள்ளது.  தற்போதைய சூழ்நிலையில், தேர்தல் ஆணையம் எளிதில் நம்பும் மக்களை ஏமாற்றும் பணியை ஏற்றுக்கொண்டு சதி வேலை களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.வாக்காளர் முறைகேடு தொடர்பாக மக்கள் தங்கள் கோபத்தை தெருவில் வெளிப்படுத்தி னால், அது தேர்தல் ஆணையத்திற்கு நல்லதாக இருக்காது. “இந்தியா கேட்” முன்பு விரைவில் மக்கள் தேர்தல் ஆணையத்திற்கு  எதிராகப் போராடலாம். வாய்ப்பு இருக்கிறது.  தற்போதைய தலைமை தேர்தல் ஆணை யர் ஞானேஷ் குமார் பாஜகவின் முகமாக நடந்துகொள்வதைப் பார்த்தால், முன்னாள் தேர்தல் ஆணையர்கள் சிறப்பாக இருந்தார் கள் என்று சொல்லலாம். தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் முன்பு உள்துறை அமைச்ச கத்தில் அமித் ஷாவுடன் பணியாற்றியவர். பின்னர் கூட்டுறவு அமைச்சகத்தில் இருந்தார். அவரை இந்தப் பதவியில் நியமித்தவர் அமித் ஷா தான். எனவே, அவர் அமித் ஷாவின் முன் முகமாக நடந்துகொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?  மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அரசியலமைப்பின் படி நாடாளுமன்றத்தில் பதவியேற்றுள்ளார். எனவே, தேர்தல் ஆணையம் அவரது வார்த்தைகளை நம்ப வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையம் சத்திய  பிரமாணம் உறுதிமொழி கேட்கிறது. மேலும் பிரச்சனையை திசை திருப்ப நடுநிலை விசார ணைக்கு அஞ்சி, குறிப்பாக பாஜகவின் வாக்கு  திருட்டை நியாயப்படுத்துகிறது. பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு நாட்டின் அரசியலமைப்பு நிறுவனங்கள் அழிக்கப்படுகின்றன” என அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.